சிரமத்தை எதிர்கொண்டுள்ள தேசிய இரத்த வங்கி: கொடையாளர்களுக்கான அறிவித்தல்

by Staff Writer 19-03-2020 | 7:51 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தேசிய இரத்த வங்கி கொடையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டில் உருவாகியுள்ள நிலைமையால் இரத்த தான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது கடினம் என்பதால் தேசிய இரத்த வங்கி இரத்தம் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. கொடையாளர்கள் தேசிய இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்ய முடியும் என அதன் பணிப்பாளர் கூறினார். அதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக கொடையாளர்கள் தமக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும். 011 533 21 53 என்பதே அந்த தொலைபேசி இலக்கமாகும். அதேபோன்று, இரத்ததானம் செய்யும் போது கருத்திற்கொள்ளப்படும் விடயங்கள் குறித்தும் பணிப்பாளர் தெளிவுபடுத்தினார். மூன்று மாதங்களுக்குள் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் இரத்தம் கொடுக்க முடியாது. காய்ச்சல், இருமல், சளி இருந்தால் இரத்தம் கொடுக்க முடியாது. குடும்பத்தில் ஒருவர் ஒரு மாத காலத்திற்குள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இரத்தம் கொடுக்க முடியாது என தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறினார்.