பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க 4 துறைகளை சார்ந்தவர்களுக்கு சலுகை

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க 4 துறைகளை சார்ந்தவர்களுக்கு சலுகை

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2020 | 7:37 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைப்பதற்காக நான்கு துறைகள் சார்ந்த சலுகைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுலாத்துறை , ஆடை வர்த்தகத்துறை, சர்வதேச சேவை மற்றும் சிறியளவிலான வியாபாரங்களில் ஈடுபடுவோர் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவர்களுக்கு சலுகை அடிப்படையில் வட்டியற்ற 6 மாதக் கடன் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

சம்பளக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான கடனை 4 வீத வட்டியில் வழங்குவதற்கு மத்திய வங்கியால் ஏனைய வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்