புது டெல்லி ஹோட்டல்களில் தங்கியுள்ள இலங்கை யாத்திரிகர்களை வௌியேறுமாறு அறிவிப்பு

புது டெல்லி ஹோட்டல்களில் தங்கியுள்ள இலங்கை யாத்திரிகர்களை வௌியேறுமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Mar, 2020 | 8:31 pm

Colombo (News 1st) இந்தியாவின் புது டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இலங்கை யாத்திரிகர்கள் 871 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், புது டெல்லியிலுள்ள 714 யாத்திரிகர்களை, அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் பஸ்கள் மூலம் பிரதான நகரங்களுக்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

இவர்களை அழைத்து வருவது தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியன தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஒரே விமானத்தில் அனைவரையும் அழைத்து வர முடியாது என்பதால், இரண்டு அல்லது மூன்று விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார்.

அழைத்துவரப்படும் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்