கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் இருந்த ஐரோப்பியர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் இருந்த ஐரோப்பியர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் இருந்த ஐரோப்பியர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2020 | 6:01 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் கொழும்பு – 7 இல் ஹோட்டல் ஒன்றில் இருந்து வௌியேறிய நிலையில், காணாமல் போயிருந்த ஐரோப்பியர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் நேற்று (17) ஊடகங்கள் வாயிலாக வௌியிடப்பட்ட விடயங்களுக்கு இணங்க, பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட குறித்த வௌிநாட்டவர் தற்போது தனிமைப்படுத்தி கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்