கொரோனா தொடர்பில் விழிப்புணர்வு வழங்க முற்பட்டவர்களைத் தாக்கிய இருவருக்கு விளக்கமறியல்

கொரோனா தொடர்பில் விழிப்புணர்வு வழங்க முற்பட்டவர்களைத் தாக்கிய இருவருக்கு விளக்கமறியல்

கொரோனா தொடர்பில் விழிப்புணர்வு வழங்க முற்பட்டவர்களைத் தாக்கிய இருவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2020 | 8:51 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புணர்வு ஆலோசனை வழங்க முற்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஐஸ்கிரீம் விற்பனை நிலையமொன்றிற்குள் வௌிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் விழிப்புணர்வு ஆலோசனை வழங்க முற்பட்டபோதே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நோய் நிவாரண கட்டளைச் சட்டம் மற்றும் இலங்கை குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவைக்கு அமைய, சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்