கண்காணிப்பை தவிர்த்தவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை

கண்காணிப்பை தவிர்த்தவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை

கண்காணிப்பை தவிர்த்தவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2020 | 2:31 pm

Colombo (News 1st) கண்காணிப்பு நடவடிக்கைகளை தவிர்த்த நபர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மார்ச் முதலாம் திகதியிலிருந்து 9ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டை வந்தடைந்த அனைவரும் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களின் வசிப்பிடங்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

சுமார் 2000 பேர் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Covid 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தொடர்பில் முழுமையாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 16 கண்காணிப்பு மத்திய நிலையங்களில் சுமார் 2,200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்