கட்டுநாயக்கவில் விமானங்களை தரையிறக்குவது இடைநிறுத்தம்

கட்டுநாயக்கவில் விமானங்களை தரையிறக்குவது இடைநிறுத்தம்

கட்டுநாயக்கவில் விமானங்களை தரையிறக்குவது இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2020 | 10:26 am

Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது இன்று (18) நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடைய நபர்கள் நாட்டிற்கு வருகைதருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு 12 மணியுடன் விமானங்களை தரையிறக்குவது இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் இதன்மூலம் பயணிகள் எவருக்கும் நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாது எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

ஆனால், இலங்கையிலிருந்து வெளியேறுதல், விமானப் பயண இடைமாறல் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் விமான சேவை என்பன தொடர்ச்சியாக இடம்பெறும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதன்போது கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்