English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
18 Mar, 2020 | 8:15 pm
Colombo (News 1st) COVID 19 வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸ் நீடிக்க முடியும் என New England மருத்துவ சஞ்சியை தகவல் வெளியிட்டுள்ளது.
இது சிறிய காற்று துகள்கள் அல்லது வாயு துள்களில் 3 மணி நேரம் செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சுத்திகரிக்கப்படாத உலோகம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றில் COVID 19 வைரஸ் ஒன்பது நாட்கள் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறியிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் இலையுதிர் காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen கூறியுள்ளார்.
அந்த தடுப்பூசியை தயாரிப்பதற்காக ஜேர்மன் ஆய்வு நிறுவனத்திற்கு 80 மில்லியன் யூரோவை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தடுப்பூசியை தயாரிப்பதற்கான பூரண உரிமை மற்றும் கொள்வனவு செய்வதற்கான உரிமையை வேறு எவருக்கும் வழங்குவதில்லையென ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜேர்மன் ஆய்வு நிறுவனத்திடம் இருந்து அதனை கொள்வனவு செய்வதற்கு தயாராவதாக தகவல்கள் வெளியான பின்புலத்திலேயே ஜேர்மன் வெளிவிகார அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அனைவரும் இணைந்து இந்த வைரஸை தோற்றகடிக்க வேண்டும் என்பதனால், இந்த தடுப்பூசியின் பிரதிபலனை வறிய நாடுகள் உள்ளிட்ட உலகின் அனைத்து மக்களுக்கும் வழங்குவதே தமது நோக்கம் என ஜேர்மன் தெரிவித்துள்ளது.
14 Jan, 2021 | 03:15 PM
02 Jan, 2021 | 02:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS