இறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு வரி நீக்கம்

இறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு வரி நீக்கம்

இறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு வரி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2020 | 5:29 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் முகக் கவசங்களுக்கு தீர்வை வரி அடங்கலான ஏனைய வரி விதிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் இந்த வரி நீக்கம் அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் வலுவாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிணங்க முகக் கவசங்கள் மற்றும் தொற்று நீக்கிகள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள் வர்த்தக பொருட்களுக்கான விசேட வரி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்