by Staff Writer 17-03-2020 | 5:34 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஜரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் இன்று முதல் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜரோப்பா, வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் அருகில் உள்ள இராணுவ முகாம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் நேற்றைய தினம் அறிவுறுத்தியது. இதனையடுத்து, இந்த நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, பதிவு மேற்கொண்ட வெளிநாட்டு பிரஜைகளை பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.