தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் விபரங்கள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் விபரங்கள் வௌியீடு

by Staff Writer 17-03-2020 | 6:14 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், கந்தையா அருந்தவபாலன், சிற்பரன் தவச்செல்வம், கந்தையா ரத்ணகுமார் மற்றும் மீரா அருளானந்தம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் மற்றும் சிங்கபாகு சிவகுமார் ஆகியோர் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசிய கட்சி சார்பில் நல்லதம்பி ஶ்ரீகாந்தா மற்றும் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில், அதன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.