கொரோனா பரவலினால் படப்பிடிப்புகள் ஸ்தம்பிதம்

கொரோனா பரவலினால் படப்பிடிப்புகள் ஸ்தம்பிதம்

கொரோனா பரவலினால் படப்பிடிப்புகள் ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Mar, 2020 | 6:48 am

Colombo (News 1st) கொரோனா அபாயம் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் படப்பிடிப்புகள் அனைத்தையும் நிறுத்துவதற்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, திரைப்படப் பணிகளை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களும் தீர்மானித்துள்ளதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்கள் என்பன மறு அறிவித்தல் வரை ஔிப்பதிவு செய்யப்பட மாட்டாது என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்