கொரோனாவால் இந்தியாவில் மூன்றாவது மரணம் பதிவு

கொரோனாவால் இந்தியாவில் மூன்றாவது மரணம் பதிவு

கொரோனாவால் இந்தியாவில் மூன்றாவது மரணம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2020 | 3:33 pm

Colombo (News 1st) இந்தியாவில் கொரோனாவினால் மூன்றாவது மரணம் பதிவாகியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த 64 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த நபர் மும்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

முன்னதாக 68 வயதான பெண் ஒருவர் டெல்லியிலும், 76 வயதான ஆணொருவர் கர்நாடகாவிலும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியாகவுள்ள பாடசாலைகள், கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

சனநெரிசல் வைரஸ் பரவலை அதிகரிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்