இன்று முதல் 88 ரயில் சேவைகள் இரத்து

இன்று முதல் 88 ரயில் சேவைகள் இரத்து

இன்று முதல் 88 ரயில் சேவைகள் இரத்து

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2020 | 1:38 pm

Colombo (News 1st) அரசாங்கத்தினால் விசேட விடுமுறை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (17) முதல் சில ரயில் சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை 88 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன.

அந்தவகையில்,
பிரதான ரயில் மார்க்கத்தின் 34 ரயில் சேவைகள்
சிலாபம் மார்க்கத்தின் 14 ரயில் சேவைகள்
கரையோர மார்க்கத்தின் 22 ரயில் சேவைகள்
களனிவௌி மார்க்கத்தின் 12 ரயில் சேவைகள்
வடக்கு மார்க்கத்தின் 4 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குறித்த மார்க்கங்களில் நாளாந்தம் 370 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், ரயில் போக்குவரத்திற்கான பயணச்சீட்டு விநியோகம் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ளுதல் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்