நாட்டின் எல்லைகளை மூடியது ஜெர்மனி

நாட்டின் எல்லைகளை மூடியது ஜெர்மனி

by Chandrasekaram Chandravadani 16-03-2020 | 4:57 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனி அதன் எல்லைகளை மூடியுள்ளது. பிரான்ஸ், ஆஸ்த்திரியா, சுவிட்சர்லாந்து எல்லைகள், வர்த்தக போக்குவரத்து தவிர்ந்த ஏனைய அனைத்துக்காகவும் இன்று காலை மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக நகரங்களை மூடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. நிலைமை மிக வேகமாக மோசமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரான்ஸ் சுகாதார சேவைகளின் பிரதானி, அதன் காரணத்தினாலேயே இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிந்திய தகவல்களின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளான 153,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,5,746 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.