பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை நீடிப்பு

பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை நீடிப்பு

பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2020 | 8:28 pm

Colombo (News 1st) 2020 கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காத பரீட்சார்த்திகள் இணையத்தளத்தினூடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பரீட்சைகள் திணைக்களத்தினால் 2020 மார்ச் மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைகள் நடாத்தப்படும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் பிரதான காரியாலயம் மற்றும் ஏனைய மாவட்ட காரியாலயங்களிலும் சாரதி அனுமதிப்பத்திரத்துடன் இணைந்த எவ்வித சேவைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்