நாணயக் கொள்கையை இலகுபடுத்தியது மத்திய வங்கி

நாணயக் கொள்கையை இலகுபடுத்தியது மத்திய வங்கி

நாணயக் கொள்கையை இலகுபடுத்தியது மத்திய வங்கி

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2020 | 7:36 pm

Colombo (News 1st) Covid 19 வைரஸ் தொற்று மத்தியில் பொருளாதார ஒத்துழைப்பை வழங்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கையை இலகுபடுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இன்று நடத்திய அவசர கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொள்கை வீதத்தை மத்திய வங்கி 25 புள்ளிகளால் 6.25 வீதம் மற்றும் 7.25 வீதம் வரை குறைத்துள்ளது.

நாளை (17) முதல் அமுலாகும் வகையில் நாணயக்கொள்கை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டப்படியான ஒதுக்கீட்டு வீதம் ஒரு வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்