தேசிய கண் வைத்தியசாலையின் கோரிக்கை

தேசிய கண் வைத்தியசாலையின் கோரிக்கை

தேசிய கண் வைத்தியசாலையின் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2020 | 3:13 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவசர தேவைகளுக்காக மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகைதருமாறு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் W.L.U.C. குமாரதிலக்க தெரிவித்துள்ளார்.

தேசிய கண் வைத்தியசாலைக்கு சுமார் 3000 நோயாளர்கள் நாளாந்தம் வருகை தருகின்றனர்.

இவ்வாறான நிலையில், பெருமளவானோர் ஒன்றுகூடும் பட்சத்தில் வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைரஸ் தொற்று பரவாதிருப்பதற்காக மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம் திடீர் விபத்துக்கான சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கண் நோய் தொடர்பில் அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடுமாறும் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்