புனித ஜூம்ஆ,ஐவேளை தொழுகைக்காக ஒன்று கூட வேண்டாம்!

மறு அறிவித்தல் வரை ஜூம்ஆ மற்றும் ஐவேளை தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூட வேண்டாம் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

by Staff Writer 15-03-2020 | 3:25 PM

மறு அறிவித்தல் வரை ஜூம்ஆ மற்றும் ஐவேளை தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூட வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஆகியவற்றினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்ளையும் முஸ்லிம் மக்கள் பின்பற்ற வேண்டும் என உலமா சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன், ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டதற்கு அமைய இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.