சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை

by Staff Writer 15-03-2020 | 2:18 PM
Colombo (News 1st) சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணை வழங்கக்கூடிய கைதிகள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். பிணை வழங்கப்பட்டபோதிலும், அந்த பணத்தை செலுத்த முடியாது சில கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இதன் காரணமாக, சிறைச்சாலைகளில் கடும் நெருக்கடி நிலவுகின்றது. அவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்படுவதாக M.J.W. தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அநுராதபுரம் மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கும் கந்தகாடு கண்காணிப்பு நிலையத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்