கொரோனா வைரஸ் : சுகாதார அமைச்சின் சோதனை நடவடிக்கை

கொரோனா வைரஸ்; சுகாதார அமைச்சின் சோதனை நடவடிக்கை

by Staff Writer 15-03-2020 | 7:45 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இருந்து வருகை தந்த நிலையில் கந்தக்காடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர் மற்றும் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 56 வயது பெண் மற்றும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஒருவரின் உறவினரான 17 வயது யுவதியும் தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு விசேட வைத்திய குழுக்களின் கண்காணிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என் சந்தேகத்தில் 110 பேருக்கும் அதிகமானோர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவு உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய செய்திகள்