சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில்…

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில்…

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில்…

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2020 | 10:14 am

Colombo (News 1st) 2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள், இன்று (15) வௌியிடப்படுமென்ற பிரசாரங்கள் அனைத்தும் வதந்திகள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

அத்தகைய பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை கபொத உயர்தர பரீட்சகைள், ஒத்திவைக்கப்படுவதாக வௌியாகும் தகவல்களும் உண்மைக்கு புறம்பானது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்