இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2020 | 12:56 pm

Colombo (News 1st) டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வருகைதந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்றிரவு (14) இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் தெரிவித்துள்ளன.

2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவிருந்தன.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினாருவர் அணிகளுக்கிடையிலான 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி இரண்டாம் நாளில், வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்