அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்றில்லை – வௌ்ளை மாளிகை அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்றில்லை – வௌ்ளை மாளிகை அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்றில்லை – வௌ்ளை மாளிகை அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2020 | 7:56 am

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தொற்றினால் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் விதிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (15) நள்ளிரவு முதல் அந்நாட்டுக்கு வருகைதரும் அனைவரையும் 14 நாட்களிக்கு கண்காணிப்பிற்கு உட்படுத்தவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று முதல் இஸ்ரேலின் பொருளாதார நடவடிக்கைள் மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன், வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படவுள்ளன.

வெனிசூலாவுடனான தமது எல்லைப்பகுதியை மூடியுள்ள கொலம்பியா, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்த எவருக்கும் தமது நாட்டிற்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்