97 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

வடக்கு கடல் பிராந்தியத்தில் 97 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல் 

by Staff Writer 14-03-2020 | 3:48 PM
Colombo (News 1st) வடக்கு கடல் பிராந்தியத்தில் 97 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 485 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார குறிப்பிட்டார் கேரள கஞ்சா கடத்தப்பட்ட டிங்கி படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காங்கேசன்துறை கடற்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 75 நாட்களில் 1900 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.