மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன

மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன

மிருகக்காட்சி சாலைகள், பூங்காக்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2020 | 8:06 pm

Colombo (News 1st) தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழுள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன.

இது தொடர்பில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் சரத் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்தின் கீழுள்ள தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சி சாலை, ரிதியகம சபாரி பூங்கா என்பன நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்