by Staff Writer 14-03-2020 | 4:07 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரையும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது பிணை வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளி ஒருவர், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.
நோயாளியை அழைத்துச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டியை மறித்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
பொலிஸ் களகத்தடுப்பு பிரிவினரால் நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
வௌிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்துவதற்கான நிலையத்தை மட்டக்களப்பில் உருவாக்கியமை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான பிரிவு ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.