by Staff Writer 14-03-2020 | 4:20 PM
Colombo (News 1st) மக்களிடையே ஏற்பட்ட தேவையற்ற பதற்றத்தால் சில வர்த்தகர்கள் முறையற்ற வகையில் இலாபமீட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதாக நாட்டு மக்களிடையே ஏற்பட்ட தேவையற்ற அச்சத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள், வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்புரி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களில் அதிகளவில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அமைச்சின் செயலாளர் பீ.கே.எஸ்.எல். ராஜதாச தெரிவித்தார்.
எனினும், பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உரிய முறையில் கையிருப்பில் உள்ளதாக அவர் கூறினார்.
உணவுப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை எனவும் பீ.கே.எஸ்.எல். ராஜதாச குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.