அனைத்து திரையரங்குகளையும் மூட தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூட தீர்மானம்

by Staff Writer 14-03-2020 | 4:44 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய ஆலோசனைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கலாசார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார். அதற்கமைய, மறு அறிவித்தல் வரை இன்று முதல் அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் உறுதிமொழி வழங்கப்படும் வரை இந்த தீர்மானம் அமுலில் காணப்படும் என கலாசார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்