சர்வதேச விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்தது சவுதி அரேபியா 

சர்வதேச விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்தது சவுதி அரேபியா 

சர்வதேச விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்தது சவுதி அரேபியா 

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2020 | 3:57 pm

Colombo (News 1st) நாளையிலிருந்து (15) இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் அனைத்தையும் சவுதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நாளை காலை 11 மணியிலிருந்து இந்த சேவை இரத்து அமுலுக்கு வரவுள்ளது.

கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய உள்விவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இந்த இரண்டு வாரங்களுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ஓரிரு விமானங்கள் அனுமதிக்கப்படுமென அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினம் 24 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, சவுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்