கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம் 

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம் 

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம் 

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2020 | 4:54 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து தகவல்களையும் உங்கள் வசம் கொண்டு சேர்ப்பதற்கு நியூஸ்பெஸ்ட்டினால் புதிய இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

www.coronavirus.lk என்ற இணையத்தளத்தினூடாக நீங்கள் தகவல்களைப் பெற முடியும்.

கொரோனா தொற்று தொடர்பான இலங்கையின் நிலைமை, செய்திகள், புதிய தரவுகள் ஆகியவற்றை இந்த இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

உலகளாவிய ரீதியில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அறிவதற்கு பல இணையத்தள சேவைகள் காணப்படுகின்றன.

அதற்கமைய, இலங்கையின் நிலவரங்களை துல்லியமாக அறிந்துகொள்வதற்கு புதிய இணையத்தளத்தை தயாரிப்பதற்கு நியூஸ்பெஸ்ட் தீர்மானித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்