கொரோனா வைரஸால் புது டெல்லியில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸால் புது டெல்லியில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸால் புது டெல்லியில் பெண் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2020 | 5:07 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்திய தலைநகர் புது டெல்லியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவில் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் கர்நாடக மாநிலத்திலேயே முதல் உயிரிழப்பு பதிவாகியிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் 68 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், கடந்த மாதம் சுவிட்ஸர்லாந்து மற்றும் இத்தாலிக்கு பயணம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறாயினும், கொரோனா பரவல் அவசர நிலையாக அறிவிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, சில மாநிலங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்