by Staff Writer 13-03-2020 | 4:29 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியில் பஸ் ஒன்று தீப்பிடித்தமை தொடர்பில் உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவ - கஹத்துடுவ பகுதிகளுக்கிடையில் மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றில் தீ பரவியதாக அறிக்கையொன்றினூடாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
மாக்கும்புரயிலிருந்து காலி வரை சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது.
இந்த பஸ், இலங்கை போக்குவரத்து சபையினால் கொள்வனவு செய்யப்பட்டதொன்றல்லவென அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அம்பலாந்தோட்டை டிப்போவிற்கு உரித்தான குறித்த வகையை சேர்ந்த சொகுசு பஸ் ஒன்று கடந்த முதலாம் திகதி தீப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.