ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் மூன்றாவது தடவையாக இடைநிறுத்தம்; ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

by Staff Writer 13-03-2020 | 3:52 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய பரிவர்தனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. S&P SL 20 சுட்டெண் 5.04 வீதத்தால் குறைவடைந்ததன் காரணமாக பரிவர்தனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு பங்குச்சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இந்த வாரத்தில் மூன்றாவது தடவையாகவும் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்று காலை முதல் ஆசிய பங்குச்சந்தைகள் பல கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஜப்பானில் நிக்கி குறியீட்டு எண் இன்று 8.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஹாங்காங்கில் ஹாங் செங் 5.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சீனாவின் பங்கு சந்தையும் 3.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.