கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை

கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை - ஆனந்தசங்கரி

by Staff Writer 13-03-2020 | 8:49 PM
Colombo (News 1st) பிரதான எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என தமிழர் விடுதலைக் கூடடணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிந்து கடந்த 10 வருட காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைமை எதனை பெற்றுத்தந்துள்ளது என தமிழ் விடுதலைக் கூடடணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். கல்முனை பிரதேச செயலகத்தை கூட தரம் உயர்த்த முடியாமல் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் வருடாவருடம் ஆளும் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒரே ஒரு எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளதாகவும், இதன்மூலம் பேசப்பட்ட பேரங்கள் சொந்த நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.