அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று 

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று 

by Bella Dalima 13-03-2020 | 3:59 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு (Peter Dutton) கொரோனா தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பீட்டர் டட்டன் அண்மையில் அமெரிக்காவிற்கு சென்றிருந்ததுடன் இதன்போது அமெரிக்க , பிரித்தானிய , கனேடிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளை வொஷிங்டனில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து வௌியான புகைப்படத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்புடன் அவர் அருகில் இருந்துள்ளார். இதனிடையே, 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, தாய்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.