பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கினுள் 1 பில்லியன் ​ரூபா பெறுமதியான ஹெரோயின் 

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கினுள் 1 பில்லியன் ​ரூபா பெறுமதியான ஹெரோயின் 

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கினுள் 1 பில்லியன் ​ரூபா பெறுமதியான ஹெரோயின் 

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2020 | 3:16 pm

Colombo (News 1st) உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யும் போர்வையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 95.5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் வழிநடத்தலின் கீழ், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்