நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2020 | 8:24 pm

Colombo (News 1st) நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அறிக்கையொன்றின் ஊடாக அமைச்சு அறிவித்துள்ளது.

தேவையான எரிபொருள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனால், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டியதில்லை எனவும், எவ்வித தட்டுப்பாடுமின்றி நாடளாவிய ரீதியில் எரிபொருளை வழமைபோன்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விநியோகிப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்