தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2020 | 8:35 pm

Colombo (News 1st) தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகள் மீள அறிவிக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், கொரோனா தொற்று பரவியுள்ள சில நாடுகள், தமது நாடுகளுக்கான உட்பிரவேசத்தை மட்டுப்படுத்த எடுத்துள்ள தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்