3நாடுகளின் பயணிகளை அழைத்துவர வேண்டாம் என அறிவிப்பு

தென் கொரியா , இத்தாலி, ஈரானிய பயணிகளை அழைத்து வர வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு

by Bella Dalima 13-03-2020 | 4:10 PM
Colombo (News 1st) தென் கொரியா , இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து நாட்டிற்கு பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் நாளை (14) முதல் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்குமென சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் H.M.C. நிமல்ஶ்ரீ தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்