சுற்றுலா சென்ற மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: ஹாலி எல விஞ்ஞானக் கல்லூரி ஆசிரியர்கள் நால்வர் பணி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2020 | 3:28 pm

Colombo (News 1st) திருகோணமலை – கோமரங்கடவல, மதவாச்சி குளத்தில் மூழ்கி ஹாலி எல விஞ்ஞானக் கல்லூரி மாணவர்கள் நால்வர் உயிரிழந்தமையை அடுத்து அந்த பாடசாலையின் உப அதிபர் உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல தெரிவித்தார்.

குறித்த பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி மாணவர்கள் நால்வரும் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தனர்.

பதுளை – ஹாலி எல விஞ்ஞானக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களே சுற்றுலா சென்ற நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்