கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று

கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று

கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2020 | 4:04 pm

Colombo (News 1st) கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவியும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.

அண்மையில் பிரித்தானியா சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நூற்றாண்டிற்கான பாரிய சுகாதார அச்சுறுத்தலாக கொரொனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரொன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்