அனைத்து முன்பள்ளிகளையும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடத் தீர்மானம்

அனைத்து முன்பள்ளிகளையும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடத் தீர்மானம்

அனைத்து முன்பள்ளிகளையும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2020 | 3:46 pm

Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை மூடுவதற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் A.S.M.S.மஹானாம குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் காரணமாக சிறார்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, சிறுவர் பாதுகாப்பு நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்