பாடசாலைகளை மூடுவது குறித்த தீர்மானம் பிற்பகல்

பாடசாலைகளை மூடுவது தொடர்பிலான தீர்மானம் இன்று பிற்பகல் 

by Staff Writer 12-03-2020 | 1:03 PM
Colombo (News 1st) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான தீர்மானம் குறித்து இன்று (12) பிற்பகல் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக கல்விச் சுற்றுலாக்களை இரத்து செய்யுமாறு, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அறிவித்தல் குறித்து அனைத்து அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் R.M.L. ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.