ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் ஐவருக்கு 23 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் ஐவருக்கு 23 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் ஐவருக்கு 23 ஆம் திகதி வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2020 | 5:50 pm

Colombo (News 1st) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர் ஒருவர் காயப்பட்டமை தொடர்பில் கைதான 5 மாணவர்களும் மார்ச் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், டயர் தலையில் வீழ்ந்தமையால் மாணவர் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காயமடைந்த மாணவர் தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவரின் உடல் நிலை தேறி வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பசிந்து ஹிருஷான் என்ற மாணவரே கடந்த 05 ஆம் திகதி டயர் தலையில் பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்