by Chandrasekaram Chandravadani 12-03-2020 | 12:49 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகள் மீதான புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயாக பரவி வருவதை அடுத்து ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்தான அனைத்து பயணங்களையும் 30 நாட்களுக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயாக பரவி வருவதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக, ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான அனைத்து பயணங்களையும் 30 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்துள்ளார் ட்ரம்ப்.
இந்த பயணத் தடை நாளை இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆனால், இங்கிலாந்திற்கு இந்த தடை பொருந்தாது. இந்த நடவடிக்கை வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.