நீல வர்ணங்களின் மோதல் இன்று ஆரம்பம்

நீல வர்ணங்களின் மோதல் இன்று ஆரம்பம்

நீல வர்ணங்களின் மோதல் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2020 | 8:21 am

Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் தொன்மை வாய்ந்த பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடராகக் கருதப்படும் கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான நீல வர்ணங்களின் மோதல் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது.

1879ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீல வர்ணங்களின் மோதல் உலகில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் தொடராக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

141 ஆண்டில் இவ்வருடம் நீல வர்ணங்களின் மோதல் தடம் பதிக்கின்றது.

போட்டி வரலாற்றில் 2 அணிகளும் தலா 35 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன் ரோயல் கல்லூரி அணி இறுதியாக 2016ஆம் ஆண்டு வெற்றியீட்டியுள்ளது.

கடந்த வருட தொடரில் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி அணி வெற்றியீட்டியது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள போட்டி 3 நாட்களுக்கு நீடிக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்