சோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்

சோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்

சோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2020 | 7:53 am

Colombo (News 1st) போதுமானளவு சோளம் கையிருப்பிலுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தடவை 70000 ஏக்கரில் சோளம் பயிரிடப்பட்டது.

இதன்மூலம் கிடைக்கப்பெற்ற அறுவடை 3 இலட்சம் மெற்றிக் தொன்களாகும்.

இந்நிலையில் விவசாய அமைச்சு அடையாளங்கண்டுள்ள அனைத்து காணிகளிலும் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இம்முறை வருடாந்த சோள உற்பத்தியை 8 மெற்றிக் தொன்களாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

பாரியளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரச வங்கிகளின் மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்