வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கை

வௌிநாடுகளுக்கு செல்வதை காலம் தாழ்த்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கோரிக்கை

by Staff Writer 11-03-2020 | 8:38 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு தொழில்நிமித்தம் செல்வதை காலம் தாழ்த்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை வௌியிட்டுள்ளது. வௌிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாடுகளுக்கு செல்லவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எவரேனும் வௌிநாடுகளுக்கு செல்வதற்கு தயாராக இருப்பின், சுகாதாரப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.