புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

by Staff Writer 11-03-2020 | 1:14 PM
Colombo (News 1st) புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்  தீ பரவியுள்ளது. நான்கு மாடி கட்டடத்தில் தீ பரவி வருவதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.